மருதமடு மாதா திருவிழா

இன்று 10.06.2018 இத்தாலி பலெர்மோ ஆன்மீகத்தள ஒழுங்கமைப்பில் மருதமடு மாதா திருவிழா ஜிபில்மான்னா என்ற திருத்தலத்தில் நடைபெற்றது. அருட்பணி. ஜெறோம் அமதி, கிளரேசிய சபையைச்சார்ந்த அருட்பணி. ரூபன் ஆகியோர் அன்னை மரியாளின் ஆன்மீகம் என்ற தலைப்பில் கருத்தமர்வையும் அதனைத்தொடர்ந்து சிறப்பு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. சிறப்பு திருச்சுரூப பவனியும் அதனைத் தொடர்ந்து ஆசீர்வாதமும் வழங்கப்பட்டு நிறைவுக்கு வந்தது.

  

  

திருத்தொண்டராக…


இன்று 09.06.2018 சலேசிய அருட்சகோதரர் அன்ரன்ராஜ் றெவல் இத்தாலி மெசினாவில் திருத்ததொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரோடு இரு சலேசிய இலங்கை அருட்சகோதரரும் இரு ஹெயிட்டி அருட்சகோதரரும் இத்தாலிய அருட்சகோதரருமாக ஆறுபேர் ஆயர் பாவிலுவினால் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். அருட்சகோதரர் றெவல் மன்னார் வங்காலையை பிறப்பிடமாக கொண்டவர். களப்பயிற்சிகளுக்காக பலெர்மோ வந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை ஆன்மீகப்பணியகம் சார்பாக வாழ்த்துகின்றோம்

  

   

 

தவக்காலச் சிறப்புத் தியானம்

18-03-2018 அன்று தவக்காலத்தின் மனமாற்றத்தை கருத்திற்கொண்டு ஆன்மீகப் பணியக தவக்காலக்குழுவினர் ஒருநாள்  தியா னத்தை சன் நிக்கோலோ ஆலயத்தில் ஒழுங்கு படுத்தியிருந்தனர். 

உரோமையிலிருந்து வருகை தந்த அருட் பணி. யஸ்ரின், அருட்பணி. சதீஸ் (கிளறே சியன்) ஆகியோர் நெறிப்படுத்தினர். காலை 8.30 மணிய ளவில் சிலுவைப்பாதையும், பின் நற்கருணை வழிபாடும், ஒப்புரவு அருட்சாதன நிகழ்வும் ~புலம் பெயர் வாழ்வில் குடும்பங்களில் இறை விசுவாசம்" என்ற கருப்பொருளில் கருத்தமர்வும், தொடர்ந்து ஒவ்வொரு பக்தி  சபைகளுக்குமான தொடர் நற்கருணை சந்தி ப்பும் ஆராதனையும் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

 இவ்வேளையில் வருகை தந்திருந்த அதிகமான இறைமக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டமை இறைவனின் அளவு கடந்த இரக்கத்தை வெளிக்காட்;;டியது. இறுதியாக கூட்டுத்திருப்பலியுடன் இனிதே நிறைவுற்றது. 

 

 

 

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322