புனிதர் நிலைக்கு உயர்த்த இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகள்

சன.12,2017. கடந்த 10 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையில், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பரிந்துரைகளில் பெரும்பான்மையானவை, இத்தாலி நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்த பணியில் ஈடுபட்டுள்ள பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இந்த வழிமுறைகள் பற்றி வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பாசறையில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்து, சனவரி 9ம் தேதி, இத்திங்கள் முதல் இரு மாதங்களுக்கு வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்கு துவக்க உரை வழங்கிய கர்தினால் அமாத்தோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் மிகுந்த கவனத்துடன் வகுக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார். 2006ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில், புனிதர் நிலை பேராயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 351 பரிந்துரைகளில், 139 பரிந்துரைகள், அதாவது, 40 விழுக்காடு பரிந்துரைகள் இத்தாலியிலிருந்து வந்துள்ளன என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார். 43 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகளில், இத்தாலியிலிருந்து 139, ஸ்பெயின் நாட்டிலிருந்து 60, போலந்து நாட்டிலிருந்து 22, பிரேசில் நாட்டிலிருந்து 13 பரிந்துரைகள் வந்திருப்பதை, கர்தினால் அமாத்தோ அவர்கள் குறிப்பிட்டார். ஆசிய நாடுகளில், இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகளும், தென் கொரியாவிலிருந்து 2, மியான்மாரிலிருந்து 2, சிங்கப்பூரிலிருந்து 1 என்ற எண்ணிக்கையில், புனிதர்கள் குறித்த பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு, 10 முறை, புனிதர் பட்ட நிகழ்வுகளும், 14 முறை அருளாளர்களாக உயர்த்தப்படும் நிகழ்வுகளும் நடைபெற்றன என்பதும், புதிய புனிதர்கள், ஆல்பேனியா, அர்ஜென்டீனா, மெக்சிகோ, பிரான்ஸ், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், சுவீடன் ஆகிய எட்டு நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

இத்தாலிய மொழியில் L’isola - il ponte tra Srilanka e Italia,

இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் புதிய முயற்சி.

இன்று இத்தாலிய மொழியில் L’isola - il ponte tra Srilanka e Italia, தீவு - (இலங்கைக்கும் இத்தாலிக்குமான ஓர் பாலம்) என்ற தலைப்பில் பத்திரிகை வெளியிடப்பட்டது. மூன்று மாதங்களிற்கு ஒருமுறை வெளிவரவுள்ள இந்த பத்திரிகையின்

நோக்கம் - 
1. இரண்டாம் தலைமுறையினர் விளங்கக்கூடிய அவர்களது மொழியில் எம் பண்பாட்டின் மதிப்பீடுகளை உள்வாங்கத்தூண்டல்

2. இத்தாலியர்களுக்கு எம் மொழி, எம் பண்பாடுபற்றி எடுத்துரைக்க

இப்பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி. விமல் அமதி

பத்திரிகைக்குழு (இரண்டாம் தலைமுறையினரான - இணைப்பாளர் - றிஷா நிமல்ரன், ஜெசிக்கா நெவில், ஜோர்ஜோ டக்ளஸ், ஜெனிக்கா ஜேசுரட்ணம், திட்ஷியானா ்ஸ்பன் குளோரியா ஜூட் அன்ரனி, கணனி - சுரேன், றிஷா நிமல்ரன்)

Un nuovo cammino della Comunità Cattolica Tamil Di Italia.

Oggi è stata pubblicata il primo numero della rivista L'ISOLA, il ponte tra Srilanka e Italia. La rivista verrà pubblicata ogni tre mesi.

Le finalità:
1. Spiegare alla seconda generazione tamil i nostri valori e la tradiozione nella loro lingua, ovvero l'italiano. 
2. Condividere con gli italiani i valori del nostro popolo.

Rev. Padre Vimal omi è il direttore responsabile di tale rivista. 
La redazione è costituita dalla seconda generazione: 
coordinatore Risha Nimalton, Jessica Neville, Giorgio Douglas, Jenika Jesuratnam, Tiziana Stephan, Gloria Jude Antony, 
Design, Suren Edward, Risha Nimalton.

   

இரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்

டிச.27,2016. கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற, இரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும், இரஷ்ய மக்களுக்கு, தனது செபங்களையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு தனது அனுதாபங்களைத் தெரிவித்த திருத்தந்தை, கருங்கடலில், இரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு, தான் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார். அவ்விமானத்தில் பயணம் செய்த பத்திரிகையாளர்கள், விமானப் பணிக்குழு, இராணுவத்தின் சிறந்த பாடகர் குழு, இசைக் கருவிகளை மீட்டுபவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் மற்றும், இரஷ்ய மக்களுக்கு, ஆண்டவர் ஆறுதலளிப்பாராக என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின், 26வது பாப்பிறை தலைமைப் பணியை முன்னிட்டு, இந்த இசைக்குழு, 2004ம் ஆண்டில், வத்திக்கானில், இசைக் கச்சேரியை நடத்தியது எனவும், திருத்தந்தை கூறினார். டிசம்பர் 25, இஞ்ஞாயிறன்று, கருங்கடலில் விழுந்து நொறுங்கிய Tu-154 ஜெட் விமானத்திலிருந்து குறைந்தது 12 சடலங்களை மீட்டுள்ளதாகவும், அவை மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சோச்சியிலிருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களில், அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என, 92 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில், இரஷ்ய இராணுவத்தால் போற்றப்படும் அலெக்ஸாண்ட்ரோவ் என்செம்பிள் என்ற இசைக்குழுவினரின் உறுப்பினர்களும் அடங்குவர். 3,500 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள, ஒரு மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை, இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322