புதிய தவக்கால வெளியீடு

சிலுவைப்பாதை சிந்தனைகள் அடங்கிய சிறிய புத்தகம் 26.02.2017 வெளிவருகின்றது. இதனை இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தைச்சார்ந்தசகோதரிகள் ஜெனட், றெஜினா, தீபகலா ஆகியோர் எழுத்துரு தயாரித்திருக்க 
சகோதரர் றெஜி கணனி வடிவமைப்பை செய்திருக்கிறார். 26.02.2017இலிருந்து இவற்றை ஆன்மீகப்பணியகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அருட்பணி எட்வேட் சேவியர் SDB இறைபதம் அடைந்தார்

பல ஆண்டுகாலமாக பலெர்மோ சாந்த கியாறா ஆலயத்தில் எமது புலம்பெயர் தமிழர்களின் ஆன்மீகவளர்ச்சிக்காக உழைத்தவரும்> திருச்சி சலேசிய மாகாணத்தை சேர்ந்த அருட்பணி. எட்வேட் சேவியர் . அடிகளார் 13.02. 2017அன்று இலங்கை கொட்டதெனியாவ சலேசிய இல்லத்தில் காலமானார். இவர் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இத்தாலி தமிழர்ஆன்மீகப்பணியகம் .

லூர்து அன்னையின் திருவிழா

இத்தாலியில் வாழ்கின்ற மாதகல், பருத்தித்துறை, பொயிட்டி ஆகிய பங்குகளைச்சார்ந்த இறைமக்கள் லூர்து அன்னையின் திருவிழாவை 11.02.2017 அன்று ஆன்மீகப்பணியகத்தில் சிறப்பித்தார்கள்.

   

   

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322