அருட்பணி. ஜெயசீலன் வருகை

செபமாலை தாசர் துறவற சபையைச் சார்ந்த கனடா நாட்டின் செபமாலைதாசர் சபையை குழுமத்தில் வாழும் அருட்பணி. ஜெயசீலன் அடிகளார் எம் ஆன்மீகப்பணியகத்திற்கு வருகைதந்து 07.02.2016 அன்று திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் இவர் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்ததாகவும் இங்கு தனக்கு புதுவிதமான அனுபவத்தை பெற்றுக்கொண்டதாகவும் இங்குள்ள இறைமக்கள் பொருளாதாரத்தில் குறைவாக இருந்தாலும், இறை விசுவாசத்தில் ஆழமாக இருப்பதால் இறைவன் முன் செல்வந்தர்களாக இருப்பதை அவதானித்ததாகவும் இவ்விசுவாசத்தை கைவிடாது மேலும் வளர ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

   

திருத்தந்தை, 'பாத்ரே பியோ' செபக் குழுக்கள் சந்திப்பு

பிப்.06,2016. பாவியின் காயங்களைக் குணமாக்கி, இதயத்தில் அமைதியை நிலைநிறுத்தும் இறைத்தந்தையின் அன்புப் பராமரிப்பின் உயிருள்ள சாட்சியாக, புனித 'பாத்ரே பியோ' அவர்கள், ஒப்புரவு அருளடையாளத் திருப்பணியின் வழியாகத் திகழ்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

'பாத்ரே பியோ' என்று அன்புடன் அழைக்கப்படும் பியெத்ரெல்சீனா நகர் புனித பயஸ், பதுவை நகரில் மறைப்பணியாற்றிய குரோவேஷிய நாட்டின் புனித லியோபோல்தோ மாந்திச் ஆகிய இரு புனிதர்களின் திருஉடல்கள் பிப்ரவரி 5 மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் பொது மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளன.

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322