Strict Standards: Non-static method JApplicationSite::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /web/htdocs/www.italytamilchaplaincy.com/home/templates/wt_churchy/layouts/com_content/article/default.php on line 14

Strict Standards: Non-static method JApplicationCms::getMenu() should not be called statically, assuming $this from incompatible context in /web/htdocs/www.italytamilchaplaincy.com/home/libraries/cms/application/site.php on line 279

அனுதின செபங்கள்

 

அனுதின செபங்கள்

 

திருச்சிலுவை அடையாளச் செபம் (பெரியது)

 திருச்சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளும் எங்கள் சருவேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

 

மூவொரு இறைவனைப் புகழ்தல்

 

பிதா, சுதன் , பரிசுத்த ஆவிக்கு மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

 

இயேசு கற்றுத்தந்த செபம்

 

பரலோகத்திலே இருக்கின்ற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.உம்முடைய இராட்சியம் வருக. உம்முடைய திருச்சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழ விடாதேயும் தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

 

மங்கள் வார்த்தைச் செபம்.

 

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே

 

அர்ச்சியஷ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.

 

பரிசுத்த ஆவியானவருக்குச் செபம்

 

பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். உமது விசுவாசிகளின் இருதயங்களை நிரப்பி உமது நேசத்தின் அக்கினியை அவர்களிடத்தில் பற்றியெரியச் செய்தருளும். ஆண்டவரே உமது பரிசுத்த ஆவியை எங்களிடத்தில் அனுப்பியருளும் அப்போது எங்கள் இருதயங்கள் புதுப்பிக்கப்படும்.

 

செபிப்போமாக.

 

பரிசுத்த ஆவியின் பிரகாசத்தினால் விசுவாசிகளின் இருதயங்களை புதுப்பித்தருளின சருவேசுரா. நாங்களும் அதே பரிசுத்த ஆவியின் வரத்தினால் நல்லவைகளை விரும்பவும் அவருடையஆறுதலை எப்போதும் பெற்று அக்களிக்கவும் பண்ணியருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து மூலமாக பெற்றுத் தந்தருளும் ஆமென்.

 

விசுவாச அறிக்கை (இது ஒரு செபமல்ல)

 

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் பரிசுத்த அவியினால் கர்ப்பமாய் உற்பவித்து, புனித கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சியோ பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன். ஏக, பரிசுத்த, கத்தோலிக்க அப்போஸ்தலிக்க

 

திருச்சபையையும் புனிதர்களின் சமூக உறவையும் விசுவசிக்கின்றேன். பாவப்பொறுத்தலையும் விசுவசிக்கின்றேன். உடலின் உயிர்ப்பையும் விசுவசிக்கின்றேன். நித்திய வாழ்வையும் விசுவசிக்கின்றேன். ஆமென்.

 

மூவேளைச்செபம்.

 

ஆண்டவருடைய தூதர் மரியாவுக்கு தூதுரைத்தார்.

 

அவள் தூய ஆவியினால் கருத்தரித்தாள் (அருள் நிறைந்த மரியே)

 

இதோ ஆண்டவருடைய அடிமை

 

உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் (அருள் நிறைந்த மரியே)

 

வார்த்தை மனுவுருவானார்

 

எங்களிடையே குடிகொண்டார். (அருள் நிறைந்த மரியே)

 

இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படியாக.

 

இறைவனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

செபிப்போமாக:

 

சருவேசுரா சுவாமி! உமது திருக்குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து மனிதன் ஆனதைத் திருத்தூதர் சொன்னதினாலே அதை அறிந்திருக்கின்ற நாங்கள் அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மகிமையைஅடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். இந்த மன்றாட்டை அதே இயேசுக்கிறிஸ்து நாதர் மூலமாக ஏற்றுத்தந்தருளும் ஆமென்.

 

பாஸ்கா காலத்தில் மூவேளைச்செபம்.

 

விண்ணக அரசியே மனம் களிகூரும் - அல்லேலூயா!

 

ஏனெனில் இறைவனை கருத்தாங்கப் பேறுபெற்றீர் - அல்லேலூயா

 

கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர் - அல்லேலூயா

 

ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். . அல்லேலூயா

 

செபிப்போமாக

 

இறைவா! உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகம் களிகூரத் திருவுளமானீரே அவருடைய திருத்தாயாகிய புனித கன்னிமரியாளின் துணையால் நாங்கள் என்றும் நிலையான பேரின்ப வாழ்வைப் பெற அருள் புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

 

உத்தம மனஸ்தாப செபம்.

 

என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்திற்கு பாத்திரராய் இருக்கின்ற தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினாலே முழுமனதுடன் துக்கப்படுகின்றேன். இனிமேல் சுவாமி தேவரிருடைய உதவியினாலே நான் ஒருபோதும் பாவம் செய்யேனென்றும் பாவங்களுக்கு அடுத்த காரணங்களை விட்டுவிடுவேன் என்றும் கெட்டி மனதுடன் வாக்குப்பண்ணுகின்றேன். எங்கள் நாயகன் இயேசுக்கிறிஸ்து பாடுபட்டு அடைந்த மட்டில்லாத பெறுபேறுகளைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுப்பீர் என நம்புகின்றேன். என் பாவங்களைப் பொறும் சுவாமி என் பாவங்களைப் பொறும் சுவாமி என் பாவங்களையெல்லாம் பொறுத்தருளும் சுவாமி ஆமென்.

 

காலைச்செபம்

 

என்னை அன்பு செய்யும் வானகத்தந்தையே! உமது அன்பின் பொருட்டு எனக்கு இந்த நாளைத் தந்துள்ளீர். இன்று நான் சந்திக்கப்போகும் எல்லா மனிதர்களையும் உம்மிடம் ஒப்படைக்கின்றேன். இன்று எனக்கு நிகழ இருப்பவை அனைத்தும் உமது எண்ணப்படி நடக்கட்டும். இன்று நீர் எனக்கு தரப்போகும் அனைத்திற்கும் இப்பொழுதே நன்றி கூறுகின்றேன். அன்பான இயேசுவே உம்மைப்போன்று நானும் வானகத்தந்தையின் விருப்பப்படி வாழ எனக்கு உதவி செய்யும். அன்பான ஆவியானவரே இன்று நீர் என்னுள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தூண்டிவிடும் போது அவற்றை நான் விழிப்புடன் அவதானித்து அன்புச் செயல்கள் செய்ய எனக்கு உதவி செய்யும்.

 

ஆமென்.

 

மாலைச்செபம்

 

என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே! இந்த நாளின் முடிவில் உமக்கு நன்றி கூறுகின்றேன். நீர் என்னோடு இருந்ததை நான் உணர்ந்தேன். நான் உம்மை நினையாத போது நீர் என்னை நினைத்தீர் இப்போது உமக்கு மீண்டும் நன்றி கூறுகின்றேன். என்னுடைய அம்மாவிற்காக நன்றி கூறுகின்றேன் என்னுடைய அப்பாவிற்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய சகோதரர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய நண்பர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னை நேசிக்கின்ற அன்பான இயேசுவே! நான் நித்திரை செய்யும் போது என்னோடு இரும். எனக்கு நல்ல ஓய்வைத் தந்து என்னை இந்த இரவில் பாதுகாரும். என்னை நேசிக்கும் பரிசுத்த ஆவியானவரே! இந்த நாள் முழுவதும் நீர் எனக்குத் தந்த நல்ல சிந்தனைக்கு நன்றி கூறுகின்றேன். இந்த இரவு முழுவதும் நீர் என்னோடு இருந்து நாளைக் காலையில் என்னை உம்நினைவால் எழுப்பிவிடும் ஆமென்.

 

என் இயேசுவே

 

என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பில் நின்று இரட்சித்தருளும். சகல ஆன்மாக்களையும் பரலோக பாதையில் வழிநடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாக வேண்டியவர்களுக்கு விசேஷ உதவி செய்தருளும்.

 

சமாதானத்திற்காக செபம்.

 

ஆண்டவரே! என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும். வெறுப்புள்ள இடத்தில் அன்பையும் மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும். ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும். அவநம்பிக்கை

 

உள்ள இடத்தில் நம்பிக்கையையும் இருள் உள்ள இடத்தில் ஒளியையும். துன்பம் உள்ள இடத்தில் இன்பத்தையும் நான் விதைத்திட அருள் தாரும். நான் ஆறுதல் தேடுவதை விட ஆறுதல் அளிக்கவும் பிறரால் புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரைப் புரிந்து கொள்ளவும். அன்பு செய்யப்படுவதை விட அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும். ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிப்பதன் மூலம்தான் மன்னிப்படைய முடியும். மடிவதன் மூலம்தான் முடிவில்லாத வாழ்வுக்குப் பிறக்க முடியும். ஆமென்.

 

பரிபூரண பலனுள்ள செபம்

 

மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே! அடியேன் தேவரீருடைய சமூகத்தில் முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்துஎன் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் எண்ணினார்கள்என்று தேவரீரைப்பற்றி முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின்

 

வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மனவுருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில். திடனான விசுவாசம். நம்பிக்கை. இறையன்பு. என்ற புண்ணியங்களையும் என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தையும் அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனையையும் என் இதயத்தில் பதியச் செய்தருள வேண்டுமென்று என் நல்ல இயேசுவே தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி பிரார்த்திக்கின்றேன் சுவாமி. ஆமென்.

 

அதிதூதரான மிக்கேல் செபம்

 

அதிதூதரான புனித மிக்கேலே யுத்தநாளில் எங்களைத் தற்காரும். பசாசின் துஷ்டதனத்திலும் கண் ணிகளிலும் நின்று எங்களைக் காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையு டன் மன்றாடுகின்றோம். வானுலக சேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீரும் ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுற்றித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தேவ வல்லமை யைக் கொண்டு நரக பாதாளத்திலே தள்ளிவிடும். ஆமென்.

 

கிருபை தயாபரத்துச் செபம்

 

கிருபை தயாபரத்திற்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சீவியமே மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்மக்களை உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்த கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உமது தயாபரமுள்ள திரு இரக்கக் கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதுவன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உமது திருவயிற்றின் கனியான இயேசுநாதருடைய பிரத்தியச்சமான தரிசனத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்பரசமுள்ள கன்னிமாமரியே சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

மிகவும் இரக்கமுள்ள தாயே

 

மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம்.உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே தயவுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டிவருகின்றோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே ஆமென்.

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322