தன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து

செப்.11,2015. திருத்தந்தையாகிய தன்னையும் சேர்த்து, அனைவருமே வெளிவேடக் காரர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், புனித பவுல் அடியார், திமொத்தேயுவுக்கு எழுதியத் திருமடலில் தன் குறைகளை அறிக்கையிடும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு மறையுரை வழங்கினார் திருத்தந்தை.

நமது குறைகளையும், குற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் துணிவு இருந்தால், அடுத்தவரை இரக்கத்துடன் காணும் பக்குவமும் பெறுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.தன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை அகற்றாமல், சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்ற எண்ணுவோரின் வெளிவேடத்தை இயேசு நற்செய்தியில் சாடியிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய வெளிவேடம், திருத்தந்தை துவங்கி, அனைவரிலும் இருக்கக்கூடும் என்று எடுத்துரைத்தார்.

பிறரைக் குறை சொல்லாமல், பழித்துரைக்காமல் வாழும் எவரையும், உடனடியாகப் புனிதர்களாக உயர்த்தலாம் என்றும், மன்னிக்கும் பரந்த மனதைப் பெற அனைவரும் செபிக்கவேண்டும் என்றும் கூறி, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

திருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்

80 வயதிற்கும் மேற்பட்ட ஐவர் உட்பட 20 பேரை புதிய கர்தினால்களாக இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிர்வாகப் பணிகளில் தற்போதிருக்கும் 15 புதிய கர்தினால்களும் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அனைத்துக் கண்டங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார், திருப்பீட சமூகத் தொடர்பாளர் அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி.

இந்த 15 கர்தினால்களுள் 5 பேர் ஐரோப்பாவிலிருந்தும், அமெரிக்கக்கண்டம் மற்றும் ஆசியாவிலிருந்து மூவர் வீதமும், ஆப்ரிக்கா மற்றும் ஓசியானியாவிலிருந்து இருவர் வீதமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கர்தினால்களாக அறிவிக்கப்பட்டள்ள டோங்கா பேராயர் Soane Patita Paini Mafi அவர்களே, 53 வயதில் மிகக் குறைந்த வயதுடையவர். இவர்களில் அதிக வயதுடையவர், Manizalesன் ஓய்வுபெற்ற பேராயரும், 95 வயது நிரம்பியவருமான José de Jesús Pimiento Rodriguez ஆவார்.

திருப்பீடத்தின் உச்ச நீதிமன்றத் தலைவரான பேராயர் தோமினிக் மம்பெர்த்தி, மியான்மாரின் யங்கூன் பேராயர் சார்ல்ஸ் மாவுங் போ, போர்த்துக்கல்லின் பேராயர்  Manuel José Macario do Nascimento Clemente, எத்தியோப்பியாவின் பேராயர் Berhaneyesus Demerew Souraphiel, நியூசிலாந்தின் பேராயர் John Atcherley Dew,  இத்தாலியின் பேராயர்கள் Edoardo Menichelli, மற்றும் Francesco Montenegroவியட்நாம் பேராயர் Pierre Nguyên VÄN Nhon,  மெக்சிகோவின் பேராயர் Alberto Suàrez Indaதாய்லாந்தின் பேராயர் Francis Xavier Kriengsak Kovithavanijஉருகுவாய் பேராயர் Daniel Fernando Sturla Berhouet, இஸ்பெயினின் பேராயர் Ricardo Blázquez Pérez, பானமா ஆயர் José Luis Lacunza Maestrojuán, கேப் வெர்தே ஆயர் Arlindo Gomes Furtado, திருப்பீடத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி, பேராயர் Luigi De Magistris, ஓய்வுப் பெற்ற திருப்பீடத் தூதர், பேராயர் Karl-Joseph Rauber, Tucumánன் ஓய்வுபெற்ற பேராயர் Luis Héctor Villaba, Xai-Xaiன் ஓய்வுபெற்ற ஆயர் Júlio Duarte Langa ஆகியோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 20 பேரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி புனித பேதுரு பேராலய வழிபாட்டில் திருத்தந்தையால் அதிகாரப்பூர்வமாக கர்தினால்களாக உயர்த்தப்படுவர்.

 

ஆதாரம் வத்திக்கான் வானொலி

திருத்தந்தையின் நத்தார் செய்தி

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (எசாயா 9:2)

ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது.”  (லூக்கா 2:9)

ஆழ்ந்த இருளை ஊடுருவிச் செல்லும் ஒளியாக மீட்பர் பிறந்துள்ளதை இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. ஆண்டவரின் பிரசன்னம்தோல்வியின் சுமைஅடிமைத்தனத்தின் வருத்தம் ஆகியவற்றை நீக்கி,மக்கள் நடுவேமகிழ்வையும்ஆனந்தத்தையும் உருவாக்குகிறது.

இவ்வுலகம் இருளால் சூழப்பட்டிருக்கும் இவ்வேளையில்நாம் விசுவாசத்தின் சுடரால் ஈர்க்கப்பட்டுகடவுளின் இல்லத்திற்கு வந்துள்ளோம். குழந்தையாய்ப் பிறந்துள்ள இந்த ஆதவனைத் தியானிக்க நம் உள்ளங்களைத் திறப்போம்.

காலத்தின் துவக்கத்திலிருந்தே இருள் இவ்வுலகை மூடிவந்துள்ளது. தன் உடன்பிறப்பின் மேல் கொண்ட பொறாமையால்காயின்ஆபேலைக் கொன்ற நாள் முதல்வன்முறைவெறுப்புபோர்அடக்குமுறை ஆகிய தீமைகளால் மனித வரலாறு காயமடைந்துள்ளது.

இந்த வரலாற்றுப் பாதையில்பொறுமையுடன் காத்திருக்கும் தந்தையின் அன்புஇருளையும்அநீதியையும் வெல்லும் வகையில் ஒளிர்கின்றது. பொறுமையிழந்து வெடிப்பது விண்ணகத் தந்தையின் குணம் அல்ல. காணாமற்போன மகனின் வருகைக்காகக் காத்திருந்த தந்தையைப்போலஅவர் காத்திருப்பவர்.

இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த ஒளிபெத்லகேமில் பிறந்துமரியா மற்றும் யோசேப்பு ஆகியோரின் கரங்களில் தவழ்ந்தது. இடையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்இதுவே உங்களுக்கு அடையாளம் (லூக்கா 2:12) என்று தூதர்கள் அறிவித்தனர். அவர்கள் சொன்ன 'அடையாளம்கடவுள் கொண்ட தாழ்ச்சியின் மிகத்தாழ்ந்ததோர் அடையாளம். உலகினர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கடவுளின் மென்மையான குணம்இவ்வகையில் வெளியானது.

குழந்தையாகப் பிறந்துதீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டுள்ள இக்குழந்தையைப்பற்றி சிந்திப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். நாம் இறைவனைத் தேடிச் செல்வதற்குப் பதில்இறைவன் நம்மைத் தேடி வருவதை நாம் உணர்கிறோமாநம்மை அவர் தேடிக் கண்டுபிடிக்க அனுமதிக்கிறோமா?

மாடடையும் தொழுவத்தில் பிறந்துள்ளவர்தற்பெருமை கொண்டோரைத் தேடாமல்எளிய மக்களைத் தேடிச் சென்றதைச் சிந்திக்கிறோம். இந்தத் தொழுவத்தை நெருங்கி வந்து, "மரியேஎங்களுக்கு இயேசுவைக் காட்டும்" என்று கன்னித்தாயை வேண்டுவோம்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322