அறிவித்தல்

வருகின்ற வெள்ளிக்கிழமை(25-01-2018)  ஆன்மீக இயக்குனருக்கு அமலமரித்தியாகிகள்  சபை மேலாளருடன் ஒன்று கூடல் இருப்பதால் நற்கருணை ஆராதனை இடம்பெறமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

முதல் தேவநற்கணை அருட்சாதன விழா

17.06.2018 அன்று இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பலெர்மோ ஆன்மீகத்தளத்தில் 10 சிறுவர்களுக்கு முதல்திருவருட்சாதன நிகழ்வு சன்நிக்கோலா ஆலயத்தில் இடம்பெற்றது. அருட்பணி. மதி இளம்பருதி, அருட்பணி. விமல் அ.ம.தி ஆகியோhர் இணைந்து அருட்சாதன சிறப்புத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். 

அருட்பணி. மதி அவர்கள் தமது மறையுரையில் பகிர்ந்தளித்தல் பற்றி மிகவும் தெளிவாக எளிமையாக விளக்கிக்கூறி அப்பண்பை நாம் வளர்க்க வேண்டும் என்றும், நன்றியுரையில் பலெர்மோ ஆன்மீகத்தள திருச்சபைக்குடும்பமானது மிகவும் துடிப்பாக இயங்குவதை காணும்போது தன்னுள்ளம் மகிழ்வதாகவும், இதற்கு வழிசமைத்த ஆன்மீக இயக்குனர், அவர் வழி தொடரும் இறைமக்கள் அனைவருக்கும் தமது நன்றிகள் என்றும் கூறியிருந்தார்.

புனித அந்தோனியார் திருவிழா

இத்தாலி பலெர்மோவில் சிறப்பு நற்கருணை ஆராதனையும் திருவிழா ஆயத்த திருப்பலியும் புனித அந்தோனியாரின் சிறப்பு திருப்பலியும்… 
மணற்காடு, பாசையூர், தாளையடி, ஊரணி ஆகிய இடங்களைச்சார்ந்த மக்கள் இணைந்து கொண்டாடினர்.

  

 

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322